பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் மற்றும் நிறுவனர் நாளை முன்னிட்டு 30 முதல் 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை

நிகழ்வு நாள் : 15.09.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் மற்றும்
நிறுவனர் நாளை முன்னிட்டு
30 முதல் 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை
*****
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் (ம) நிறுவன நாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அகராதி, அரிய நூல்கள், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் (ம) நிறுவன நாளை சிறப்பிக்கும் வகையில் 2021 செப்டம்பர் 15 முதல் 2021 அக்டோபர் 30 வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் நூல் விற்பனை செய்யப்படவுள்ளது.
நூல் விற்பனை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.30 வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். இணைய வழியிலும் தொகை செலுத்தி நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். நூல் விவரங்களை அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.