பேராசிரியர் கா.சிவத்தம்பி பத்தாவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 06.07.2021

பேராசிரியர் கா.சிவத்தம்பி பத்தாவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

2021 ஜூலை 6 முதல் 12 வரை (ஏழு நாட்கள்)

நேரம் : மாலை 6 மணிமுதல் 8 மணிவரை (இலங்கை, இந்திய நேரம்)

தமிழியல் ஆய்வுகளில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய பேராளுமை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். பேராசிரியரின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது ஆய்வுப் பங்களிப்பை மீளப்பேசும் முயற்சியே இக்கருத்தரங்கம். உலகமெங்கிலுமிருந்து பேராசிரியரின் நண்பர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், புலமைத்துவ உறவுகள் கலந்துகொண்டு ஆய்வுரை நிகழ்த்த இருக்கிறார்கள். இக்கருத்தரங்கில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்!

கருத்தரங்கில் பங்கேற்கப் பதிவு செய்து, ஏழு நாட்களும் பங்கேற்பதோடு, பின்னூட்டப் படிவத்தை நிறைவு செய்து அனுப்புவோருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

கருத்தரங்கில் பங்கேற்கக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவு செய்த அனைவருமே ZOOM இணைப்பு வழியாகக் கருத்தரங்கில் பங்கேற்க முடியும்.

பதிவு செய்வதற்கான இணைப்பு கீழே:

https://forms.gle/iGaiken8giQGFXD96

கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்தவிருப்போர்:

இலங்கையிலிருந்து… பேரா.அ.சண்முகதாஸ், பேரா.சி.மௌனகுரு, பேரா.எம்.ஏ.நுஃமான், பேரா.செ.யோகராசா, பேரா.அம்மன்கிளி முருகதாஸ், கலாநிதி சு.சிவரத்தினம், கலாநிதி நதிரா மரியசந்தனம், சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனதாசன் கந்தசாமி, கல்வியாளர் சு.ஜெயச்சந்திரன், எழுத்தாளர் முகமது மசூர், எழுத்தாளர் மல்லிப்பூ சந்தி திலகர்.

இந்தியாவிலிருந்து… பேராசிரியர் அ.மார்க்ஸ், பேரா.நா.சுலோசனா, ஆய்வாளர் மே.து.ராசுகுமார், பேரா.அ.ராமசாமி, பேரா.இரா.காமராசு, அறிஞர் பொ.வேல்சாமி, முனைவர் பா.ரவிக்குமார்.

கனடாவிலிருந்து… பேரா.பார்வதி கந்தசாமி, பேரா.நா.சுப்பிரமணியன், பேரா.சந்திரகாந்தன், திருமதி.வாசுகி நகுலராஜா.

இங்கிலாந்திலிருந்து… எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் எம்.பவுசர், பேரா.பாலசுகுமார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து… எழுத்தாளர் ரஞ்சகுமார்.

இவர்களோடு பங்கேற்பாளர்களாகிய நீங்களும்.

வருக!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.
அனாமிகா களரி பண்பாட்டு மையம், சேனையூர்-இலண்டன்.
யா-கார் தியேட்டர், சென்னை.