01.03.2021 முதல் 08.03.2021 வரை சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறை

நிகழ்வு நாள் : 01.03.2021

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழாய்வுப் பெருவிழா பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவினை அடியொற்றி 01.03.2021 முதல் 08.03.2021 வரை சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறையின் தொடக்கவிழா இன்று 01.03.2021 நடைபெற்றது. இதில் நிறுவன தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலத்தின் உதவிப் பேராசிரியரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். டோரா திரைப்பட இயக்குநர் உயர்திரு. தாஸ் ராமசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் அ.சதீஷ், முனைவர் கோ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் சி.ஜெயமுருகன் நன்றியுரை வழங்கினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி பட்டறையின் முதல் அமர்வில் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் “சுவடியியல் அறிமுகம்”, “சுவடிப் பிரதியாக்க முறையியல்” ஆகியப் பொருண்மையில் பொழிவு ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் சென்னை, உ.வே.சா.நூல் நிலையத்தின் காப்பாட்சியர் முனைவர் கோ.உத்ராடம் அவர்கள் “தமிழ்ச்சுவடிகளும் எழுத்துக் குறியீடுகளும்”, “சித்தர் இலக்கியச் சுவடிகள்” ஆகியப் பொருண்மையில் பொழிவு ஆற்றினார்.
படச்செய்தி: பயிற்சிப் பட்டறையின் தொடக்கவிழாவில் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார். உடன் நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், டோரா திரைப்பட இயக்குநர் உயர்திரு. தாஸ் ராமசாமி, நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், நிறுவன முனைவர் பட்ட மாணவர் சி.ஜெயமுருகன்.