திருமூலர் ஆய்விருக்கை (ம) வள்ளலார் ஆய்வு இருக்கை

நிகழ்வு நாள் : 23.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்திமூன்றாவது நாளான இன்று (23.02.2021) முற்பகல் திருமூலர் ஆய்விருக்கை சார்பாக இரு இருக்கையின் பொறுப்பாளர் முனைவர்
தி. மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரையும், வள்ளலார் ஆய்வு இருக்கையின் நோக்கம் பற்றியும் எடுத்துரைத்தார். ஆன்மிகம் என்பது வேறுபாட்டை விளக்கி அனைவரையும் உளதாக்கும் உயர்ந்ததாக இருப்பது. இதனைச் சங்கச் சான்றோர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றனர். ஆன்மிகச் சிந்தனைகளை உணரவும், மனிதகுலம் தழைக்கவும் உதவி செய்யும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவர் பேசியபோது பட்டயம் பெறும் மாணவர்கள் திருமூலர் கருத்துகளை வாழ்க்கை நெறியாக வாழ்ந்து காட்ட வேண்டும். மதம் கடந்து மனித நேயம் பரவிடத் திருமூலர் தூதுவர்களாகச் செயலாற்றிட வேண்டும் என்று கூறினார்.
தலைமையுரை ஆற்றிய கோவை ஞானாலயா வள்ளலார் கோட்டத்தைச் சேர்ந்த இமயசோதி திருஞானானந்தா சுவாமியின் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் தமிழில் பேசினால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம். வள்ளலார் இயற்றிய திருவருட்பா இறப்பொழிக்கும் சன்மார்க்க நெறியினை அருளுகிறது. இதைப் பாடமாகக் கல்வியாகக் கற்கும்போது இந்த தலைமுறை சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்றார். அதுபோலவே> தமிழ்த் திருமுறைகள் முக்கியமாகj; திருமூலர் பாடல்கள்வழி நமது பண்பாடு அறிவியல்> மருத்துவம்> யோகம் பற்றி உலகமே வியக்கும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதை அனைவரும் கற்க வேண்டும் என்று கூறினார். அகத்துள்ளே ஆன்ம தீபம் ஏற்றி மானுடத்தை இறவாநிலைக்கு ஆற்றுபடுத்திய வள்ளல் பெருமானாரின் சிந்தனைகளைத் தமிழ் நிலத்திற்கும் வெளி மானுட குலத்திற்கும் சென்று சேர்ந்தால் மானுடம் தழைக்கும் மகிழும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு திருமந்திர ஆய்வு இருக்கையில்; பயின்ற மாணவர்களுக்கு இமயசோதி திருஞானானாந்த சுவாமிகள் பட்டயங்களை வழங்கினார். திருமூலரும் காலக்கணித அறிவியலும் என்ற பட்டயத்திற்கான சான்றிதழ்களை ஹோராமார்தாண்ட் ஓம் உலகநாதன், முனைவர் க.நெல்லைவசந்தன் அவர்கள் இருவரும் சேர்ந்து வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக மனிதவளத்துறை சக்தி சுகர்ஸ் லிமிடெம் கோவை முதுநிலை துணைத்தலைவர் பொன். முத்து வேலப்பன் கலந்து கொண்டார். சோதிடர்கள் ஓம் உலகநாதன்> முனைவர் க. நெல்லை வசந்தன்> முனைவர் தி. சிவநேசன்> தயவுதிரு. தே. செல்வபூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்fs;. மாலை நிகழ்வாக> அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்> மேனாள் துணைவேந்தர் முனைவர் அருணாசிவகாமி அவர்கள் திருமூலரும் வள்ளலாரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆன்மிகத்தில் மருத்துவம் என்ற தலைப்பில் பார்வதிபுரம் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த கி. கோமளா அவர்களும் தயவுதிரு புதுவை சங்கர் முருகேசன் அவர்கள் வள்ளல் பெருமானாhpன் தமிழ் மற்றும் பங்களிப்பும் என்ற தலைg;gpல் உரையாற்றினார்fs;.
இறுதியாக> வள்ளலார் ஆய்வு இருக்கையின் பொறுப்பாளர் முனைவர் சுவாமி சுப்பிரமணியம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.