சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்வு இருக்கை தொடக்க விழா

நிகழ்வு நாள் : 21.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்தோறாவது நாளான இன்று (21.02.2021) முற்பகல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்வு இருக்கை தொடக்க விழா மற்றும் வடலூர் வள்ளல் பெருமான் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் தயவுத்திரு.சாது ஜானகிராமன் சுவாமிகள், எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவன தலைவர், முனைவர் எம்.எஸ்.மதிவாணன், குறள்மலைச் சங்கம் நிறுவனர் திரு.பா.ரவிக்குமார், சாந்தம் உலகத் தமிழ் வளர்ச்சி ஆய்வு மையம் தலைவர் திரு.ஜி.கரிவரதராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மஞ்சுளா ஏற்புரை வழங்கினார். தயவுத்திரு. வெங்கடேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா சாத்திர நூலா? தோத்திர நூலா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது,