டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளை, வ.உ.சி அறக்கட்டளை (ம) சன்மார்க்கச் செம்பொருட்டுணிவு ஆய்விருக்கை

நிகழ்வு நாள் : 19.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்தொன்பதாவது நாளான இன்று (19.02.2021) முற்பகல் டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, சண்முகா தொழிற்சாலை கலை (ம) அறிவியல் கல்லூரி, தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நா.பிரபு அவர்கள் ‘இடைக்கால உரையாசிரியர்கள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு ஆற்றினார். தமது பொழிவில் அதிகம் அறியப்படாத, பேசப்படாத உரையாசிரியர்களைப் பட்டியலிட்டு அவர்கள் எவ்வாறெல்லாம் வேறுபடுகின்றனர் என்றும்; எந்த நிலையில் முதன்மைத்துவம் பெறுகின்றனர் என்றும் விளக்கிக் கூறி அவர்களை ஆய்வு அடிப்படையில் அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பான பொழிவினை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் தலைமையேற்க, தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் முன்னிலை வகித்தார். சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அறக்கட்டளைப் பொறுப்பாளரும் தமிழ்மொழி(ம) மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் பெ. செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் க. சிந்தாணி நன்றியுரை வழங்கினார். ஆய்வாளர் த.இராகுல்காந்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 12 மணிக்கு வ.உ.சி அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவரும் பேராசிரியருமாகிய முனைவர் பெ. இளையாப்பிள்ளை அவர்கள் அற இலக்கியங்களில் பொருண்மைக் கூறு எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இவர் தனது பொழிவில் இன்றைய காலத்திற்கேற்றவாறு அற இலக்கியங்கள் கூறும் தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், இல்லறம், பிறன் மனை நோக்காமை, கல்வி அறம், வாழ்வியல் அறம் போன்ற கருத்துகள் இந்த காலத்திற்கேற்றவாரு பொருண்மையை வகுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். இச்சொற்பொழிவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இயக்குநர் அவர்கள் தலைமையேற்றார். தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உதவிப்பேராசிரியர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் முன்னிலை வகிக்க, நூலகர், முனைவர் பி.கவிதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் கா.சிந்தாமணி நன்றியுரைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்தொன்பதாவது நாளான இன்று (19.02.2021) பிற்பகல் சன்மார்க்கச் செம்பொருட்டுணிவு ஆய்விருக்கைச் சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்றது. முனைவர் ஊரன் அடிகளார் “வள்ளலார் கண்ட தமிழ்” முனைவர் ஞானப்பூங்கோதை “காரைக்கால் அம்மையார் கண்ட தமிழ்” என்னும் பொருண்மையில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் லோககுரு மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சந்நிதானங்கள் ஸ்ரீ ல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீன இளவரசர் ஆசியுரை வழங்கினார். ஆய்விருக்கை பொறுப்பாளர் திரு.அருள்நந்தி சிவம் அவர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.