ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு (ம) நூல்வெளியீடு

நிகழ்வு நாள் : 11.02.2019

ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு (ம) நூல்வெளியீடு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தாய் 71 பெருவிழாவில் இன்று (11.02.2019) காலை, ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், முனைவர் ஹெப்சி ரோஸ்மேரி அவர்களின் “சொல்லிலக்கண மரபு” எனும் தலைப்பிலான சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் நூலினை வெளியிட நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் நிறுவன இணைப் பேராசிரியர் அ.சதீஷ், நூலாசிரியர் முனைவர் ஹெப்சி ரோஸ்மேரி மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் வி.இரா. பவித்ரா ஆகியோர்.