வைணவ ஆய்விருக்கை (ம) பரதநாட்டிய இசைக்கலை வளர் இருக்கை

நிகழ்வு நாள் : 07.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஏழாவது நாளாக (07.02.2021) முற்பகல் வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பொதிகைத் தொலைக்காட்சி மேனாள் நிகழ்ச்சி இயக்குநர் கலைமாமணி முனைவர் பால.இரமணி, அவர்கள் ‘பாசுரப்படி இராமாயணம் என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இராமாபுரம் சிறுமிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்விருக்கைப் பொறுப்பாளர் முனைவர் நா.ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.

(07.02.2021) பிற்பகல் பரதநாட்டிய இசைக்கலை வளர் ஆய்விருக்கை சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் கோ.தாமோதரன் அவர்கள் ‘தமிழ் இலக்கியத்தில் பரதநாட்டியம் என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்விருக்கைப் பொறுப்பாளர் திருமதி. ச.விசயலட்சுமி பூபதி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.