கலாநிலையம் டி.என். சேஷாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 11.02.2019

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தாய் 71 பெருவிழாவில் இன்று (11.02.2019) கலாநிலையம் டி.என். சேஷாசலம் அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “பெண்களும் சட்ட உரிமைகளும்” எனும் தலைப்பிலான சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் நிறுவனப் பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் நூலினை வெளியிட ஆய்வு மாணவர் திரு. தே.கஜீபன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் பட்டாபிராம், இந்துக் கல்லூரி பேராசிரியர் முனைவர் சு.இராஜலட்சுமி அவர்களுடன் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா.