தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை, இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 06.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆறாவது நாளாக (06.02.2021) தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை பொழிவினை நிகழ்த்திய மேனாள் துணை ஆட்சியர் பேரா.தி.ச.தர்மலிங்கம் அவர்கள் “வேதாத்திரியம் ஓர் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் பொழிவினை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது. “வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் மற்றும் யோகப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையினருக்கு முக்கியமாக பணியாளர்களின் திறன் மேம்பாட்டினை வளர்க்கும் ஒழுக்கப் பண்பாட்டினை கொண்டதாக அமைந்துள்ளது. ஆதலால் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்களின் திறன்மேம்பாடு சிறப்பு பயிற்சியாக மனவளக் கலையினை வழங்கும்போது நிறுவனங்கள் மேம்பாடு அடைகிறது. பணியாளர்களின் பணிச்சுமையிலிருந்து விடுபட ஏதுவாகிறது. இளைய சமுதாயம் இதனை ஏற்று பயிலும்போது அவர்களின் எதிர்காலம் மேம்பட்டதாக விளங்கும். இதுவே இன்றைய நமது தேவையுமாகும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார். வேதாத்திரியம் ஓர் வாழ்விய நெறி என்ற நூலினை நிறுவன இயக்குநர் வெளியிட உலக சமுதாய சேவா சங்கத்தின் சென்னை மண்டலச் செயலாளர் பேரா.எஸ். இரவி பெற்றுக்கொண்டார். இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளை சொற்பொழிவினை மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி தமிழியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.பெரியசாமி அவர்கள் எழுதிய மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தத்துவமும் இலக்கியமும் என்ற நூலினை பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் டி.சிவநேசன் வெளியிட்டார். மேற்கண்ட இரண்டு அறக்கட்டளையின் பொறுப்பாசிரியர் பேரா.முனைவர் தி.மகாலட்சமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வேளச்சேரி அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் அருள்நிதி ச.ஞானசம்பந்தன் நன்றியுரை கூறினார். முன்னதாக மனவளக்கலை பேராசிரியர் பெ.வெண்தாமரைச் செல்வி தியானம் நிகழ்த்தினார்.