பேரறிஞர் அண்ணா அவர்களின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சார்பாக சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 03.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக (03.02.2021) முற்பகல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சார்பாக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மாநிலக் கல்லூரி, மேனாள் பேராசிரியர், முனைவர் பா. உதயகுமார் அவர்கள் ‘பேரறிஞர் அண்ணாவும் தொன்மை இலக்கியமும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.
படச்செய்தி: நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை உரை ஆற்றுகிறார். நிறுவன உதவிப் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன், முனைவர் பெ.செல்வக்குமார் இணைப்பேராசிரியர், முனைவர் ப.உதயகுமார்.