உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தைத் திருநாள் விழா

நிகழ்வு நாள் : 12.01.2021

சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (12.01.2021 – செவ்வாய்க்கிழமை) தைத் திருநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் இந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையேற்க, நிறுவனக் கல்விப்பணியாளர்கள், நிருவாக அலுவலர்கள், முனைவர் பட்ட, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் தமிழர் இசைகள் இசைக்கப்பட்டு, தமிழர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.