மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் "மக்களால் நான்" என்ற நூலினை வெளியிட்டார்

நிகழ்வு நாள் : 07.09.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 07.09.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திருமதி பா.வளர்மதி அவர்கள் மகன் முனைவர் சி.பா.மூவேந்தன் அவர்கள் எழுதிய "மக்களால் நான்" என்ற நூலினை வெளியிட்டார்கள். உடன் , மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் , இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்/உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் உள்ளனர்