இணையவழி முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு

நிகழ்வு நாள் : 14.08.2020

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையவழி வாய்மொழித்தேர்வு நடைபெற்றது. “தமிழ் இதழியல் வரலாற்றில் ஆனந்த போதினி” எனும் முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான் இந்த வாய்மொழித்தேர்வை மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு. க. பாண்டியராசன் அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் நெறியாளுகையில், புறத்தேர்வாளராக சென்னைக் கிறித்தவக் கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ப. டேவிட் பிரபாகர் அவர்கள் வாய்மொழித்தேர்வினை நடத்தி வைத்தார். ஆய்வாளர் திருமதி ஆனந்த ஜோதி அவர்கள் ஆய்வுச் சுருக்கத்தையும் ஆய்வேட்டின் மீதான வினாக்களுக்கு விளக்கமும் அளித்தார்.