நிறுவன நாள் விழா நிகழ்ச்சிகள்

நிகழ்வு நாள் : 30.10.2018

தலைப்பு : 48 ஆண்டுகள் நிறைவு ; நிறுவன நாள் விழா நிகழ்ச்சிகள்

30.10.2018 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி நிறுவனத்தின் தமிழ்த்தாய் ஊடக அரங்கில் நிறுவன நாள் விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நிறுவன ஆய்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்வில் பேராசிரியர் பா.இராசா வரவேற்புரை நிகழ்த்தினார், மேனாள் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் வெ.சொக்கலிங்கம் அவர்களும் மதுரை, உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களும் வாழ்த்துரையாற்றிட, நிறுவன மேனாள் இயக்குநர்கள் முனைவர் சு. செல்லப்பனார், முனைவர் அன்னிதாமசு, முனைவர் செ.ஜீன் லாறன்ஸ், மேனாள் பேராசிரியர் முனைவர் ச.சிவகாமி, மேனாள் துணை இயக்குநர் க.ந.வீரபாகு சுப்பிரமணியன், மேனாள் கண்காணிப்பாளர் இரா.இராசா ஆகியோர் நிறுவன நாள் உரையாற்றிட, முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவன மேனாள், இந்நாள் கல்வியாளர்கள், பணியாளர்கள், ஆய்வு மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படச்செய்தி : மேனாள் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் வெ.சொக்கலிங்கம் அவர்களுடன் முனைவர் கோ.விசயராகவன், திரு.க.ந.வீரபாகு சுப்பிரமணியன், திரு.இரா.இராசா, முனைவர் செ.ஜீன் லாறன்ஸ், முனைவர் சு.செல்லப்பனார், முனைவர் அன்னிதாமசு, முனைவர் ச.சிவகாமி, முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் பா.இராசா ஆகியோர்.