தமிழ்த்தாய் 72-தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா (ம) தமிழ்நாடு அரசு 2019-2020ஆம் ஆண்டு வழங்கிய ரூ.10.00 இலட்சம் நிதியில் மேம்படுத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் திறப்பு விழா

நிகழ்வு நாள் : 29.02.2020

தமிழ்த்தாய் 72 தமிழாய்வு பெருவிழாவின் நிறைவு விழாவும், தமிழ்நாடு அரசு வழங்கிய நிதி நல்கையில் மேம்படுத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா கருத்தரங்கு கூடத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றன.
இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றினர். மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் கருத்தரங்க கூடத்தை திறந்து வைத்து விழா சிறப்புரை ஆற்றினார். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களும் நமது புரட்சித் தலைவி அம்மா தமிழ் நாளிதழ் ஆசிரியர் எழுச்சி பாவலர் மருது. அழகுராஜ், மாநில கல்லூரி பேரவை மேனாள் தலைவர் திரு.ம.மாதவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சினை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சமூகவியல், கலைமேம்பாட்டு ஆய்விருக்கையின் ஆய்வாளர் ஈ.விசய் அவர்கள் தொகுத்து வழங்கினர். இறுதியாக நிறுவன முனைவர் பட்ட மாணவர் திரு.சி.இராமகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.