தினமணி அறக்கட்டளை, காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை, கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 11.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 11ஆம் நாள் (11.02.2020) நிகழ்வாக, முற்பகல் தினமணி அறக்கட்டளை சார்பில் “சி.ஆர்.இரவீந்திரன் புதினங்களில் உத்திகள்” என்ற தலைப்பில் கிருட்டிணகிரி, கிராம நிருவாக அலுவலர் முனைவர் பெ.அசோகனும், நண்பகல் பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை சார்பில் “காமராசரின் ஆளுமைத் திறன்” என்ற தலைப்பில் இலக்குவனார் இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செம்பை சேவியரும், பிற்பகல் கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளை சார்பில் “எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள்” என்ற தலைப்பில் கிருட்டிணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் த.பேகம் ஆகியோரின் சொற்பொழிவுகளும் நூல்வெளியீடுகளும் நடைபெற்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நூல்களை வெளியிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கைப் பொறுப்பாளர் முனைவர் ம.செ.இரபிசிங், எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சர்மிளா, கவிஞர் சுரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

படச்செய்தி : 11.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நூல்களை வெளியிட, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கைப் பொறுப்பாளர் முனைவர் ம.செ.இரபிசிங், எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சர்மிளா, கவிஞர் சுரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் நூலாசிரியர்கள் முனைவர் த.பேகம், கவிஞர் செம்பை சேவியர், முனைவர் பெ.அசோகன் மற்றும் அறக்கட்டளைகள் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா.