அகத்தியர் ஆய்விருக்கை

நிகழ்வு நாள் : 09.02.2020

தமிழ்த்தாய் - 72, ஒன்பதாம் நாள் (09.02.2020 – ஞாயிறு) நிகழ்வில் முற்பகல் அகத்தியர் ஆய்விருக்கை சார்பாக மரு. இரவிச்சந்திரன் அவர்களின் “சித்தர்கள் மருத்துவக் கருத்தரங்கம்” நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். விழாவில் மாண்புமிகு க.பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் பேருரையாற்றினார். மாண்புமிகு நீதி அரசர் தி.நெ.வள்ளிநாயகம் அவர்கள் மற்றும் முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப.(ஓய்வு) அவர்கள் சிறப்புரை வழங்கினர். மருத்துவர் கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மருத்துவர் கோ.கலைச்செல்வி நன்றியுரை ஆற்றினார். முன்னாள் நிறுவன வளாகத்தில் 72 அரிய வகை மூலிகை செடிகள் நடப்பட்டன. பிற்பகல் பாவரசு பாரதி சுகுமாரன் ஒருங்கிணைப்பில் “பன்னாட்டுத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு”நடைபெற்றது.