பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை (ம) பெரியார் மணியம்மை அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 17.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பதினேழாவது நாளான (17.02.2021) முற்பகல் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் வடலூர், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவர்கள் ‘பாவேந்தர் பார்வையில் பெரியார்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளர் முதுமுனைவர் மா.மணிகண்டன் அவர்கள் ‘பரிபாடலும் தமிழர் இசையும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் தமிழர் இசை அறிமுகம், பரிபாடல் பாடியோரும், இசை வகுத்தோரும், பரிபாடலில் உள்ள இசையும் பண்களும், பரிபாடலிலுள்ள தோற்கருவிகள், துளைக்கருவிகள், யாழ், வீனை போன்ற இந்நூலில் உள்ள செய்திகளை எடுத்துக் கூறினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பதினேழாவது நாளான (17.02.2021) பிற்பகல் பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் மா.ரெத்தினேஸ்வரி அவர்கள் ‘கல்கியின் பார்த்திபன் கனவும் மாஸ்தியின் சிக்க வீர ராஜேந்திராவும் – ஒரு மதிப்பீட்டு ஒப்பீடு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஒப்பிலக்கியம் வளர்ச்சி நிலை பெறுகிறது. தமிழ் ஒப்பிலக்கிய அறிஞர் வை.சச்சிதானந்தம் அவர்கள் ‘ஒப்பிலக்கியம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய இலக்கியங்களின் உத்திகளை அறிவியல் வழி நின்று ஆராய்ச்சி முறையில் பயன்படுத்துவதன் மூலமாக முறைப்படி ஆழ்ந்து கற்பதே ஒப்பிலக்கியம் என்றார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கா.காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.